Published : 23,Jan 2019 07:11 AM

வீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்

Man-arrested-in-Murder-case-near-Hosur

ஓசூர் அருகே வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெரியப்பாவை வெட்டி கொலை தம்பி மகன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புக்கசாகரம் ஊராட்சிக்குட்பட்ட ஆப்ரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா(70). இவரது தம்பி மகன் சிவபிரகாஷ். இருவருக்கும் அருகருகே உள்ள நிலத்தில், மோட்டப்பா மகன் முனிராஜ் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் போது பக்கத்து வீடான சிவபிரகாஷ் வீட்டில் வீடு கட்டும் செங்கல் ஜல்லி விழுந்துள்ளது.

(சிவ பிரகாஷ்)

இதனால் மோட்டப்பா குடும்பத்திற்கும் சிவபிரகாஷ் குடும்பத்திற்கும் வாய் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மோட்டப்பா, தகாத வார்த்தை பேசிய சிவபிரகாஷின் அம்மாவை அடித்ததாக சொல்லப்படுகிறது. ஆத்திரமடைந்த சிவபிரகாஷ், பெரியப்பா என்றும்கூட பார்க்காமல் மோட்டப்பாவை அரிவாளால் பலமாக வலது காலை வெட்டியுள்ளார், இரத்த வெள்ளத்தில் அலறிய மோட்டப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் இறந்த நிலையில் இருந்த மோட்டப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். வீடு கட்டும் பொருட்கள் விழுந்த காரணமாக 70 வயது முதியவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஆப்ரி கிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  தலைமறைவாகிய சிவபிரகாஷை சூளகிரி போலீசார் தனிப்படை அமைத்து, சம்பவம் நடந்து இரண்டு மணிநேரத்தில் ஓசூரில் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்