Published : 10,Jan 2017 04:18 PM
உயர் அதிகாரிகள் மீது பாதுகாப்பு படை வீரர் புகார்... விளக்கம் கேட்கும் உள்துறை

எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் குற்றச்சாட்டு குறித்து விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படை நிர்வாகத்துக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எல்லையை காக்கும் வீரர்களுக்கு தரமான உணவு கூட வழங்கப்படுவதில்லை என புகார் வெளியான நிலையில் இது குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படை நிர்வாகத்துக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படையில் சீமா சுரக்ஷா பால் பிரிவின் 29வது பட்டாலியனில் பணிபுரியும் தேஜ் பகதூர் என்ற வீரர் பதிவிட்ட வாட்சப் வீடியோவில் தங்களை உயர் அதிகாரிகள் மிகவும் மோசமாக நடத்துவதாகவும் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், தங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதியில் உயர் அதிகாரிகள் ஊழல் செய்தாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.