Published : 06,Jan 2019 05:41 AM

வேட்பாளர் பெயரை 'கடைசிநாளில் அறிவிப்போம்' : தம்பிதுரை

Thambidurai-said-Tiruvarur-Bye-Election-Candidate-is-Announce-in-jan-10

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வரும் 10 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதன் முதலாக அறிவிப்பு வெளியிட்டார். அதனைதொடர்ந்து  அமமுக சார்பில் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் நேர்காணல் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Image result for tiruvarur election

ஆனால் அதிமுக சார்பில் வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்ற பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சர், அவைத்தலைவர் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினோம். இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

Image result for tiruvarur election

இதனால் திருவாரூரில் இடைத்தேர்தல்  நடக்காமலும் போகலாம் என்று சிலர் கருத்து கூறுகின்றனர். இதனிடையே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழும்பி வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான தம்பிதுரை “வேட்புமனுத் தாக்கலின் கடைசிநாளான 10ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் திருவாரூர்  இடைத்தேர்தல் நடைபெறும் என்றே எதிர்பார்க்கலாம். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்