[X] Close

“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..!

Rajinikanth-thanks-to-MK-Stalin

பிறந்த நாள் வாழ்த்து கூறிய பலருக்கும் நடிகர் ரஜினி தனது நன்றியினை தெரிவித்து வருகிறார்.


Advertisement

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ரஜினி, 40-ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அத்துடன் தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ள அவர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்


Advertisement

இந்நிலையில் இன்று ரஜினி தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரின் ஏராளமான ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல நடிகர் கமல்ஹாசனும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.” என கூறியுள்ளார்.

 


Advertisement

மு.க.ஸ்டாலினும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்!” என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் ரஜினி, “வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே. உங்கள் நண்பன், ரஜினிகாந்த்” என கூறியுள்ளார்.

இதுதவிரவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் அமிதாப் பட்சன், மோகன் லால் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினி அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்திலேயே நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close