தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது.
கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கூறிய நிலையில் மொத்தமுள்ள 112 தொகுதிகளில் டிஆர்எஸ் 88 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராகிறார்.
இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் நாளை பதவி ஏற்கிறார். தெலங்கானா சட்டப்பேரவையில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமாக 88 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே தெலங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இன்றே பதவி ஏற்பார் என முதலில் சொல்லப்பட்ட நிலையில் நாளை தான் அவர் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 11.30 மணிக்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம் எல் ஏக்கள் கூடி சட்டப்பேரவை கட்சித் தலைவராக முறைப்படி சந்திரசேகர் ராவை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட காங்கிரஸ் 19 இடங்களை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கின்றன. மஜிலிஸ் முஸ்லீமீன் கட்சி 7 இடங்களை பிடித்துள்ளது. பாரதிய ஜனதா, பார்வர்டு பிளாக், சுயேச்சை ஆகியோருக்கு தலா ஒரு இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!