[X] Close

புயல் பாதிப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - 5 வாகனங்களுக்கு தீ வைப்பு 

pudukkottai-kothamangalam-people-protest-against-officials-for-not-coming-to-see-gaja-cyclone-affected-areas

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் புயல் நிவாரண பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி ஆலங்குடி வட்டாட்சியரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் நாக, வேதாரண்யம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைப் போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளும் கஜா புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். 

இந்நிலையில், கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என கூறி போலீசார், அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தின் ஈடுபட்டனர். பின்னர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Advertisement

இதனையடுத்து, வட்டாட்சியர் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனம் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காவலர் ஒருவர் காயமடைந்தார், மேலும், கோட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 5 வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close