Published : 04,Apr 2017 10:35 AM

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பினாமி அரசு தயாராக இல்லை: மு.க.ஸ்டாலின்

MK-Stalin-blames-TN-government

தற்போதுள்ள சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் ஆளும்கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் அவர்கள் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில தேர்தல் ஆணையம் தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என கூறுகிறது. இது ஏனென்றால், தற்போது தேர்தலை நடத்தினால் சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி அரசு மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். இதனால் அவர்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. எனவே மாநில தேர்தல் ஆணையம் மூலம் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்த முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்றமும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு ஒருவார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்ன வருகிறது பார்ப்போம் என கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்