விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 178 ரன்னை இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தன. இதன் இறுதி போட்டிக்கு மும்பை, டெல்லி அணிகள் முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி பெங்களூரில் இன்று நடந்து வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
Read Also -> ஐபிஎல் 2019: டி காக்கை மும்பைக்கு விற்றது பெங்களூரு!
அதன்படி டெல்லி அணியின் உன்முக்த் சந்தும் கவுதம் காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் கவுதம் காம்பீர். அடுத்து வந்த மனன் சர்மாவும் தேஷ்பாண்டே பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 5 ரன் எடுத்திருந்தார்.
பின்னர் துருவ் ஷோரியும் உன்முக்த் சந்தும் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். சந்த், 13 பந்தில் குல்கர்னி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து, ஷோரி, 31 ரன்னும் ராணா 13 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆக, ஹிம்மத் சிங் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார். அவர் அதிகப்பட்சமாக 41 ரன் எடுத்து, அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.
Read Also -> சிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி
(கவுதம் காம்பீர்)
அடுத்து வந்தவர்கள் யாருமே நிலைத்து நிற்காததால், அந்த அணி 45.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சிவம் துபே, குல்கர்னி தலா 3 விக்கெட்டும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டும், முலானி ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து மும்பை அணி சிறிது நேரத்தில் ஆட்டத்தைத் தொடங்குகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?