Published : 28,Mar 2017 06:00 AM

சொந்த மண்ணில் வீறுநடைபோடும் இந்தியா

TeamIndia-win-the-Decider-Test-by-8-wickets--Claim-the-4-match-series-2-1-INDvAUS

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ‌8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும், கடைசிப் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களும், இந்திய அணி 332 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களில் சுருண்டது.பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 2 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது‌. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் இந்திய அணி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. விராட் கோலி கேப்டனான பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்