திருக்கோவிலூரில் ஏடிம் இயந்திரத்தில் நூதன முறையில் ஏமாற்றி 32000 பணத்தை எடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் வெளியில் எடிஎம் இயந்திரம் அமைந்துள்ளது. இந்த ATMல் கடந்த 17ம் தேதி ஜெயசீலன் என்பவர் தமது வங்கி கணக்கில் இருந்து 2000 ரூபாய் எடுக்க வந்தார். சரியாக பணம் எடுக்க தெரியாத காரணத்தால், அருகில் இருந்த நபரிடம் பணம் எடுத்து தர சொல்ல, அந்த நபர் மிகவும் தந்திரமாக பணம் எடுத்து தருவது போல தன்னுடன் வந்த சக நண்பரிடம் பின்புறமாக ஜெயசீலனின் ATM காடை கொடுத்து அருகில் இருந்த இயந்திரத்தில் பயன்படுத்திக் கொண்டனர்.
பணம் எடுத்து தருவது போல ஜெயசீலனின் ATM பின் நம்பரை கேட்டு தெரிந்து கொண்டு அந்த நபர், ஜெயசீலன் சென்ற பிறகு ஏற்கெனவே தெரிந்து கொண்ட பின் நம்பரை போட்டு அந்த அக்கவுண்ட்டில் இருந்த 32000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இரண்டு முறை குறுஞ்செய்தி வந்த பிறகே தமது கணக்கில் பணம் எடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கிகளில் எத்தனை முறை கூறினாலும், பின் நம்பரை மற்றவர்களுக்கு சொல்வதை தவிர்காததால் தான் இது போன்ற கொல்லை சம்பவம் நடைபெறுவதாக கூறுகிறார்கள். பொது மக்கள் தரப்பில் சொல்வதோ, அங்கு ஒரு காவலரை வைத்து இருந்தால் கூட இது போன்ற அசம்பாவித சம்பவம் நடந்திருக்காமல் இருக்கும் என கூறுகின்றனர்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்