Published : 22,Mar 2017 12:44 PM
இரட்டை இலை எங்களுக்குக் கிடைக்கும்: இரு அணியுமே தளராத நம்பிக்கை

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் தளராத நம்பிக்கையில் உள்ளன.
இரட்டை இலைச் சின்னம் கட்சிப் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்களை வைத்து நிறைவு செய்துள்ளனர். இந்த நிலையில் இரு தரப்பினருமே தங்கள் தரப்பு வாதங்களை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.