[X] Close

பெண் பிள்ளைக்காக ஆண் குழந்தையை கொன்ற தாய்..!

Maharashtra-Woman-Kills-10-Month-Old-Son-as-She-Wanted-Daughter--Police

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் பிள்ளை வேண்டும் என்பதற்காக, 10 மாத ஆண் குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவுரங்கா பாத் மாவட்டம் பைதங்கேதா கிராமத்தைச் சேர்ந்தவர் வேதிகா எரண்டே. இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 10 மாத குழந்தை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய குழந்தையை யாரேனும் கடத்தி இருக்க வாய்ப்புள்ளதாக அந்தப் புகாரில் தாய் வேதிகா தெரிவித்திருந்தார். ஆனால், புகார் அளித்த சில மணி நேரங்களிலே, போலீஸ் மோப்ப நாய் வேதிகா வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் டேங் ஒன்றில் இருந்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்தது. 


Advertisement

இதனையடுத்து, குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பிட்கின் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பண்டிட் சோனவானே வேதிகா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் அளித்த பதில்கள் சோனவானேக்கு திருப்தியாக இல்லை. இதனையடுத்து, தாய் வேதிகாவிடம் அவர் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, தனது 10 மாத குழந்தையை கொன்றதை வேதிகா ஒப்புக் கொண்டுள்ளார். 

வேதிகாவுக்கு ஏற்கனே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறக்கும் என்று நினைத்திருந்த நிலையில், ஆண் குழந்தை பிறந்ததால் அவர் விரக்தியடைந்தார். பின்னர், 10 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டார். 

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close