[X] Close

நாளை குமாரசாமியை சந்திக்கிறார் கமல்ஹாசன்

Tomorrow--Kamal-Hassan-meets-karnataka-cm-kumaraswamy

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கமல்ஹாசன் நாளை கர்நாடக முத‌லமைச்சர் குமாரசாமியை சந்திக்க உள்ளார். இதற்காக இன்று சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா சம்பந்தமாக பேசுவதற்கு தாம் கர்நாடகா செல்லவில்லை என்றும் காவிரி தொடர்பாக பேசப் போவதாகவும் கூறினார். 

போராட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், மக்கள் போராட்டங்களை நிறுத்தவும் மாட்டார்கள் நிறுத்தவும் கூடாது என தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close