[X] Close

ஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்த பாண்டியா

IPL-2018-Match-31-Hardik-Pandyas-3-for-restricts-RCB-to-167-for-7

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டீயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 167 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக வோஹ்ரா, டி காக் களமிறங்கினர். டி காக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பெங்களூரு வீரர்கள் நிதானமாக விளையாடினார்கள். இதனால், ரன் ரேட் பெரிய அளவில் உயரவில்லை. 

மெக்கல்லம் 37, வோஹ்ரா 45, கோலி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி 19 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. கடைசி ஓவரில் கிராண்ட் ஹோம் 3 சிக்ஸர்கள் விளாசியதால் 20 ஓவர்கள் முடியில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. 18வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரில் மந்தீப் சிங், கோலி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close