[X] Close

கன்னடத்திற்கு போகிறார் தனுஷின் ‘ப.பாண்டி’

P-pandi-film-has-remake-in-kanada

‘ப.பாண்டி’கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.


Advertisement

தனுஷ் இயக்கத்தில் முதன்முதலாக வெளி வந்த திரைப்படம் ‘ப.பாண்டி’. இதில் ராஜ்கிரண் நாயகனாக நடித்திருந்தார். முதலில் இப்படத்திற்கு ‘பவர் பாண்டி’ என தலைப்பிட்டிருந்தனர். ஆனால் வரி விலக்கு சிக்கல்கள் எழும் என்பதால் அதன் தலைப்பை இறுதிக் கட்டத்தில் படக்குழு ‘ப.பாண்டி’ என மாற்றியது. வயதான ஒருவரின் காதல் அனுபவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தனுஷை ஒரு தரமான இயக்குநராக அடையாளப்படுத்தியது. 2017 ஆண்டு வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய பட்டியலில் இது இடம் பிடித்தது. 

இந்நிலையில் இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷூம் தனுஷ் வேடத்தில் சுதீப்பும் ரேவதி வேடத்தில் மூத்த நடிகை ஒருவரை படக்குழு தேடி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close