[X] Close

சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் சாய் பல்லவி!

Sai-Pallavi-may-team-up-with-Sivakarthikeyan-in-his-next

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

பொன்ராம் இயக்கத்தில் ’சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் அவர் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இதையடுத்து ’நேற்று இன்று நாளை’ ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது சயின்ஸ் பிக்சன் படம் என்று கூறப்படுகிறது. இதில் சில ஹாலிவுட் நடிகர்களும் டெக்னீஷியன்களும் பங்கேற்க உள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.


Advertisement

இதையடுத்து, ராஜேஷ் .எம். இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப காட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கும் இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close