[X] Close

ஆந்திராவிற்கு ரூ.12,476 கோடி சிறப்பு நிதி: மாநிலங்களவையில் தகவல்

Rs-12-476-crore-given-to-Andhra-Pradesh-as-special-assistance

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூபாய் 12,476.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று பேசிய மத்திய இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக மத்திய அரசு ரூபாய் 12,476.76 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இதில் ரூபாய் 2,500 கோடி மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Advertisement

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இரண்டு பேர் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது கோரிக்கையை எழுப்பி அவையை முடக்கி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்ட விவகாரத்தை மத்திய இணையமைச்சர் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close