[X] Close

நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

AIADMK-MP-s-protest-in-Parliament

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நாடாளுமன்ற வளாகத்தில உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழக்கமிட்டனர். இதில் அதிமுகவின் மாநிலங்களை, மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ‌ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 5 நாட்களாக மக்களவை நடவடிக்கை தொடங்கக்கூடிய 11 மணிக்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின்னர் நாடாளுமன்றத்துக்குள் சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழக்கம் இடுவதால் அவை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close