[X] Close

கமல்ஹாசனுக்கு ஜோரான பாதுகாப்பு!

Tight-Security-For-Actor-KamalHassan

நாளை அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை காலை தனது அரசியல் பயணத்தை (நாளை நமதே) தொடங்குகிறார். இதைதொடர்ந்து மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும், அவரது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்று கட்சிப் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கிறார். இந்தக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே கமல்ஹாசனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பணிகள் முன்னாள் ஐ.ஜி மவுரியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மதுரை விமான நிலையத்தில் இருந்து தனது பணியினை தொடங்கியுள்ள மவுரியா, 2 ஓய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் 20 தனியார் பாதுகாவலர்களை கமல்ஹாசனுக்கான பாதுகாப்புப் பணியில் நியமித்துள்ளார். மேலும் கமல் பயணிக்கும் காரில் 4 கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நாளை வழி நெடுகிலும் மக்களை திறந்த வேனில் நின்று கமல் சந்தித்து பேசவுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close