[X] Close

சுற்றுப் பயணத்திற்கு தயாரானார் ஸ்டாலின்..!

MK-Stalin-ready-for-Next-tour

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதிவரை மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் அவர் எந்தெந்த மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் என்ற அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்து 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறாவிட்டாலும் கூட பலம் வாய்ந்த எதிர் சக்தியாக உருவெடுத்தது. இதற்கு மு.க.ஸ்டாலினின் சுற்றுப் பயணம் முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தயாராகும் வரையில் மு.க.ஸ்டாலின் இந்தச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close