[X] Close

சுரேஷ் ரெய்னாவின் இனிமை பாடல்: கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!

Suresh-Raina-Sings--Bitiya-Rani---Harbhajan--Gautam-Gambhir-Impressed

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பெண் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லமான ரெய்னாவுக்கு, அதிரடியாக அடிக்க மட்டுமல்ல, இனிமையாக பாடவும் தெரியும். ஏற்கனவே சில இந்தி படங்களில் அவர் பாடியுள்ளார். இந்நிலையில் இவர் மனைவி பிரியங்காவின் ரேடியா ஷோ புரமோஷனுக்காக பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. 


’பிடாயா ராணி’ (Bitiya Rani ) எனத் தொடங்கும் இந்தப் பாடல், பெண் குழந்தைகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இனிமையான குரலில் அவர் பாடும் இந்தப் பாடல், ஒரு தேர்ந்த பாடகர் பாடியதை போல உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங்கும், கவுதம் காம்பீரும் ரெய்னாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close