[X] Close

வரும் 8-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

O-Panneerselvam-hunger-strike-protest-on-March-8

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை கோரி வரும் 8-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி வரும் 8-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான மதுசூதனன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அதில், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த பொழுது ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என்று உறுதியாக அறிவித்திருந்தார், ஆனால் இன்று வரை ஜெயலலிதா மரணம் குறித்து இன்றைய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close