Published : 03,Jan 2018 08:28 AM

அதிமுக நாளிதழின் பெயர் ‘நமது அம்மா’

admk-newspaper-name-is-Namadhu-amma

அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயர் வைக்கப்பட உள்ளதாக, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் காலை 10:30 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. இதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவுக்கு பிரத்யேகமாக தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதுதவிர அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்காக பிரத்யேகமாக இருந்த தொலைக்காட்சி தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், புதிய தொலைக்காட்சியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்