[X] Close

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழப்பு

11-people-died-during-the-New-Year-celebration-in-Tamil-Nadu

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.    

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் போது நிகழ்ந்த விபத்தில்  சென்னையில் மட்டும் 179 பேர் காயமடைந்துள்ளனர். ஈரோடு கரட்டடிபாளையத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞரும், அவரது வாகனம் மோதியதில் சாலையில் நடந்துச்சென்றவரும் உயிரிழந்தனர். கோவை சூலூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார்‌மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விழுப்புரத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். 

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கரவாகனங்கள் மோதி கொண்டதில் போக்குவரத்துக்கழக ஊழியர் உள்ளிட்ட இருவர் இறந்தனர். இதேபோல், சென்னைக்கு அருகேயுள்ள ஆவடியில் சாலையோர தடுப்புச்சுவரின் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காயமடைந்த 179 பேருக்கு ராயப்பேட்டை, ஸ்டான்லி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளின் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close