Published : 21,Dec 2017 01:08 PM

சச்சினின் கன்னி பேச்சுக்கு முட்டுக்கட்டை..!

When-Bharat-Ratna-Sachin-Tendulkar-was-not-allowed-to-speak-in-Rajya-Sabha

சச்சின் டெண்டுல்கரின் முதல் நாடாளுமன்ற பேச்சு, காங்கிரஸ் கட்சியினரின் அமளியால் தடைபட்டது. 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான சச்சின் விளையாட்டு துறையின் எதிர்காலம் குறித்து மாநிலங்களவையில் இன்று பேச முற்பட்டார். இது அவரது முதலாவது நாடாளுமன்ற பேச்சு ஆகும். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிடங்கள் சச்சின் நின்று கொண்டே இருந்தார். அமளியை நிறுத்துமாறு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் எம்.பி.கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் சச்சினால் பேச முடியாமல் போனது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினருக்கு உரிய  அதிகாரங்கள் இவர்களுக்கும் உண்டு. சலுகைகளும் அப்படித்தான். டெண்டுல்கர்  மோசமான வருகை பதிவை கொண்டுள்ளார் என்ற விமர்சனம் பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். நாடாளுமன்றத்திலேயே அவர் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு சச்சின் வருவதே அரிது எனும் போது அவர் உரையாற்றுகிறார் என்பது அரிதினும் அரிது. ஆனால், காங்கிரஸ் எம்.பி,கள் முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். 

        

உலக அளவில் புகழ் பெற்ற சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாது அவமானமான விஷயம் என்று பாஜக எம்.பி. ஜெயா பச்சன் கூறினார். விவாதத்தில் பங்கேற்று பேச முடியாது போன சச்சினின் சர்ச்சை செய்தி இன்று ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்