Published : 20,Dec 2017 07:16 AM

வெற்றிவேல் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பாய்கிறது

Vetrivel--Face-The-election-violation-Case

தேர்தல் விதிகளை மீறி ஜெயலலிதா குறித்த வீடியோவை வெளியிட்ட டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில், படுக்கையில் கண் விழித்து சாய்திருந்தபடி, தனது இடது கையால் பழச்சாறு அருந்துகிறார். இந்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று சென்னையில் வெளியிட்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைப்பெறவுள்ளது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் ஜெயலலிதா குறித்த வீடியோ வெளியீடு தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வெற்றிவேல் மீது 126 (பி) சட்ட விதிப்படி வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்