
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.|
ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், கடலூரிலும் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமூக தீர்வு காணவில்லை என்றால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், திருச்சி மண்டலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.