பொன்வண்ணனின் ராஜினாமா கடித்தை ஏற்கமாட்டோம் என நடிகர் சங்கத்தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பொன்வண்ணன் கடிதம் அளித்திருக்கிறார். புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற போது எந்தக் கட்சியையும் சாராத நிர்வாகம் அமைய விரும்பியதாகவும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொன்வண்ணன் அதில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பொன்வண்ணனின் ராஜிநாமாவை ஏற்க நடிகர் சங்கம் மறுத்துள்ளது. ஆயினும், பதவி விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் பொன்வண்ணன் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்கத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்று கூறியுள்ளார். அத்துடன் தனது நிலைப்பாடு குறித்து பொன்வண்ணன் விளக்கம் தருவார் என்றும், நடிகர் சங்க விதிப்படி தேர்தலில் நிற்பது தவறில்லை என்றும் கூறியுள்ளார். அவரைத்தொடர்ந்து பேசிய நாசர், பொன்வண்ணன் அளித்த ராஜிநாமா கடிதத்தை ஏற்கமாட்டோம் எனவும், ராஜிநாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி