பாடல் உரிமை யாருக்குச் சொந்தம்.. யுவன், ரஹ்மான் சொன்னதென்ன.. இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சொல்வதென்ன?

பாடல் விவகாரத்தில் இளையராஜா- வைரமுத்து இடையேயான மோதலே இன்னும் ஓயாத நிலையில், இளையராஜாவின் அடுத்த நடவடிக்கை பேசுபொருளாகியிருக்கிறது.
ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா
ஏ ஆர் ரஹ்மான், இளையராஜாpt web

பாடல் உரிமை விவகாரம்

பாடலுக்கு இசை பெரிதா? மொழி பெரிதா என்ற விவகாரத்தை பேசுபொருளாக்கியிருக்கிறார், கவிஞர் வைரமுத்து... இளையராஜாவின் பாடல்களை அவர் தயாரிப்பாளருக்கு விற்றுவிட்டதால், அவற்றை உரிமை கோர முடியாது என்கின்றன, ஆடியோ நிறுவனங்கள்... பாட்டாலே புத்தி சொன்ன இளையராஜாவின் பாடல்களை வைத்து பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்க, அவர் அடுத்த அதிரடியை காண்பித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் உருவாகிவரும் கூலி படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதன் ஒரு பகுதியில் இளையராஜாவின் தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக முறையான அனுமதி பெறப்படவில்லை என இளையராஜா தரப்பு வழக்கறிஞர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாடல் தொடர்பாக முறையாக அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அதை நீக்க வேண்டுமென, அவரின் வழக்கறிஞர் வலியுறுத்துள்ளார். அவ்வாறு செய்யாவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் அனைத்து பாடல்கள் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் அவரே என்றும், உரிய அனுமதியின்றி அவரின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை சட்டம் 1957-இன் கீழ் இது குற்றம் என்றும் இளையராஜா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில், விக்ரம் பாடலுக்கு அனுமதி பெறவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதேபோல், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான FIGHT CLUB படத்தில் 'என் ஜோடி மஞ்சக்குருவி' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா
மகன்களை சமாளிக்க பேரனுக்கு சீட்டு; அதேபேரன் வைத்த வேட்டு; சரிகிறதா தேவகவுடாவின் அரசியல் சாம்ராஜ்யம்?

யுவன் சொல்வதென்ன?

பாடல் இசையமைப்பாளருக்கு உரியதா.. தயாரிப்பாளருக்கு உரியதா என்ற விவாதம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக இசையமைப்பாளர்களின் பழைய வீடியோக்கள் வைரலாக்கப்படுகின்றன. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது வை ராஜா வை திரைப்படத்தின்போது நடந்ததை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில், “வை ராஜா வை திரைப்படத்தின் போது, இயக்குநர் ஐஸ்வர்யா ‘ராஜா ராஜாதி ராஜா’ பாடலை ரீமிக்ஸ் செய்ய வேண்டும் என சொன்னார்கள். நான், இந்தப் பாடலின்மீது கை வைக்கவே முடியாது. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவரோ மீண்டும் பண்ணலாம் என்கிறார். அவரிடம் சரி என சொல்லிவிட்டு அப்பாவிடம் சென்றேன். அவரிடம் பாடலுக்கு NOC வாங்க வேண்டும். அவரிடம் கூறும்போது, அதைவச்சி என்ன செய்யப்போற என்று கேட்டார். இதற்குப் பிறகு அந்தப்பாடலில் கொஞ்சம் வேலைப் பார்த்தோம். எதுவும் செட் ஆகவில்லை” என்றார்.

கிரெடிட்கள் மற்றும் முன் அனுமதி அவசியம்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ரீமிக்ஸ் குறித்து கூறுகையில், “தற்கால இளைஞர்கள் ரீமிக்ஸ் பாடல்களை விரும்புகின்றனர். இது சரியான ஒன்று கிடையாது. கிரெடிட்கள் கொடுக்க வேண்டும். முன் அனுமதி பெற வேண்டும். உதாரணமாக, ஈஸ்வர் அல்லா எனக்கு மிகப்பிடித்த பாடல். ஜாவேத் அக்தர் எழுதி இருந்தார். ரீமிக்ஸ் செய்யும்போது அதை கொன்று இருந்தார்கள்” என கூறி இருந்தார்.

இளையராஜாவின் வழக்கறிஞர் சொல்வதென்ன?

இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு வழக்கறிஞரான சரவணன் புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் பாடல் உரிமம் குறித்து விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், “இந்தியாவின் காப்புரிமைச் சட்டம் 2012 ஆம் ஆண்டு பல புதிய பரிமாணங்களோடு வந்தது. ஒரு படம் இயக்கப்படுகிறது என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் அனைத்து உரிமைகளையும் வைத்திருப்பார் என்ற கருத்து நிலவுகிறது. அது சரிதான். ஆனால் அந்த பாடல்கள் குறித்த அந்த காப்புரிமை யாரிடம் இருக்கிறதென்றால் இசையமைப்பாளரிடம்தான் இருக்கிறது. இதைத்தான் நம் சட்டம் சொல்கிறது.

இப்போது தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல் காணொளிகளுக்கு உரிமம் வாங்குகிறார்கள். ஆனால் பாடல்களை தனியாக எடுத்து போடுகிறார்கள். பாடல்களைத் தனியாக எடுத்து பயன்படுத்தினாலே இசையமைப்பாளரின் இசைவு முக்கியம். இசையமைப்பாளரிடம் நீங்கள் ஒப்பந்தம் போடவேண்டும்; அவருக்கு ராயல்டி கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்த படத்தையும் நீங்கள் தயாரிப்பாளரிடம் வாங்கியுள்ளீர்கள் என்றால் ஒட்டுமொத்த படத்தையும் போடுங்கள். ஆனால் பாடலைத் தனியாக எடுத்து போடவேண்டும் என்றால் அதற்கான உரிமம் இசையமைப்பாளரிடம்தான் இருக்கிறது.

ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா
127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!

தயாரிப்பாளரிடம் தானே மொத்த உரிமமும் இருக்கிறது என பேசுவார்கள். ஆனால் புதிய சட்ட மாறுதல்கள் இசையமைப்பாளருக்கான உரிமையை உருவாக்கியுள்ளது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இளையராஜா தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இளையராஜா
இளையராஜாஇளையராஜா

இளையராஜாவின் பல சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் 80களிலும் 90களிலும் வந்தவை. அந்த காலக்கட்டத்தில் காப்பிரைட்ஸ் என்பது பற்றி பெரும்பாலானோருக்கு புரிதல் இல்லை. அப்போது டேப் ரெக்கார்டர் இருந்தது. அதன்பின் சிடி வந்தது, இதனை அடுத்து விசிஆரில் போட்டார்கள். எனவே அந்தகாலக்கட்டத்தில் இருந்த இசையமைப்பாளர் கேசட் போடுவதற்கான ரைட்ஸை கொடுத்திருப்பார். ஓடிடி எல்லாம் அப்போது யாருடைய கற்பனையில் கூட இல்லை. அப்போது அவருக்கே இல்லாத ஒரு உரிமையை எப்படி இளையராஜா எப்படி கொடுத்திருக்க முடியும். 90 களில் உரிமத்தை வாங்கிவிட்டேன் என்பதற்காக இப்போது யூ டியூபிலும் ஸ்பாட்டிஃபையிலும் போடுவேன் என்பது எப்படி சரியாகும். அது சரியில்லை என்பதை உணர்த்தவே இளையராஜாவின் இந்த சட்டப்போராட்டம்” என தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா
கருமுட்டையை உறைய வைத்த பட்டாஸ் பட நடிகை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com