ஜெயக்குமார் தனசிங்
ஜெயக்குமார் தனசிங்புதிய தலைமுறை

“என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்” - நெல்லை காங். நிர்வாகி உடல் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்தநிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது, எரிந்தநிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த  காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவரை,கடந்த மே 2 ஆம் தேதி முதல் காணவில்லை என ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி 7.45 மணி அளவில் இவரின் செல்போன் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஜெயக்குமார் தனசிங்கை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங், உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரை கொலை செய்தது யார் என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமார் தனசிங்
தேனியில் சவுக்கு சங்கர் கைது: கோவை கொண்டு செல்லும் வழியில் போலீஸ் வாகனம் விபத்து! லேசான காயம்!

முன்னதாக, அவரின் கைப்படவே, எழுதிய கடிதத்தில், சிலர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று எழுதியுள்ளார். இதற்கிடையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் உண்மையை கொண்டு வருவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com