அது என்ன ”Swell waves"? - அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுப்பு!

கேரளா மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதிக்கு அதி அலைக்கான ரெட் அலர்ட் நேற்று கொடுக்கப்பட்டிருந்தது.
கடல் அலை
கடல் அலைPT

இன்று முதல் நாளை வரை அரபிக் கடலின் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மும்பை ஒட்டிய கடற்கரைப்பகுதி

இன்று காலை 11:30 மணி முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் அதிகமாக இருக்கும் என IMD மற்றும் INCOIS எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்

கடல் அலைகள் 0.5 மீ முதல் 1.5 மீ வரை எழலாம் ஆகையால் மக்கள் கடற்கரையை நெருங்க வேண்டாம் என்றும் கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் அறிவுறுத்தியுள்ளது. கடலோர பாதுகாப்புக் காவலர்கள், உயிர்காப்பாளர்கள் போன்ற அவசர சேவைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதிக்கு அதி அலைக்கான ரெட் அலர்ட் நேற்று கொடுக்கப்பட்டிருந்தது.

கடல் அலை

surge எனப்படும் அதி அலைகள் காற்றின் அதிவேகத்தால் ஏற்படக்கூடியவை. இதன் காரணமாக தென் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா குஜராத் மீனவர்களுக்கு அதி அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இந்த நிகழ்வை கள்ளக்கடல் என அழைக்கிறார்கள்.

தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதி

தென் தமிழ்நாட்டிற்கு அதி அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 முதல் நாளை இரவு 11.30 வரை அதி அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடலில் 0.5 - 1.8 மீட்டர்கள் கடல் அலை எழுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுகளை கரையிலிருந்து தூரத்தில் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com