சாலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலம்.. தாயே துணியில் சுற்றி வீசிய அவலம்.. விசாரணையில் பகீர்!

கேரள மாநிலம் கொச்சியில், பச்சிளம் குழந்தையை இறந்த நிலையில் அதன் தாயே சாலையில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
கேரளா
கேரளாபுதிய தலைமுறை

கேரள மாநிலம் கொச்சியில், பச்சிளம் குழந்தை இறந்த நிலையில், அதன் தாயே சாலையில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரளா மாநிலம் கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முன் இன்று காலை பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொரியர் உறையில் உடல் சுற்றப்பட்டிருந்தநிலையில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை நடுரோட்டில் பிணமாக கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அருகில் இருந்த சிசிடிவியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டர். மேலும், குழந்தையை சுற்றி வைக்கப்பட்ட கொரியர் அட்டையில் உள்ள முகவரியை மையமாக வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், 23 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட சிசிடிவில்,குழந்தையை பெற்ற இந்த இளம் பெண் தானே குழந்தையை குடியிருப்பில் இருந்து வெளியே எறிந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பிளாட்டில் இருந்து துணியுடன் குழந்தை வீசப்படும் காட்சியும் பதிவாகியுள்ளது. இன்று காலை பிரசவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், குளியலறையில் பிரசவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளா
'வெளிய வரச் சொல்லு அவன'.. நாய் குரைத்ததால் சர்ச்சை.. அரிவாளோடு இறங்கி ரகளை செய்த துணை வட்டாட்சியர்!

இது குறித்து குழந்தை பெற்ற அந்த பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டதில், ”குழந்தை கொலையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களின் மகள் கர்ப்பிணி ஆக இருப்பதும் எங்களுக்கு தெரியாது.” என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது அந்த குழந்தையை பெற்று எடுத்த பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டநிலையில், இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பெற்ற தாயே தன் குழந்தையை ரோட்டில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏறபடுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com