கைகளை இழந்தும் நம்பிக்கை இழக்காத இளைஞர்! தமிழ்நாட்டிலேயே கை இல்லாதவராக லைசன்ஸ் பெற்ற முதல் நபர்!

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கைகள் இல்லாத முதல் நபராக கார் ஓட்டும் உரிமம் பெற்று சாதனையை படைத்துள்ளார் 30 வயது நபர்.
சென்னை
சென்னை முகநூல்

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கைகள் இல்லாத முதல் நபராக கார் ஓட்டும் உரிமம் பெற்று சாதனையை படைத்துள்ளார் 30 வயது நபர்.

சென்னை வியாசர் பாடியை சேர்ந்தவர் தான்சென், வயது 30. இவருக்கு 10 வயது இருக்கும்போதே, உயர் அழுத்த மின்சார கம்பி கம்பியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கை முட்டிக்கு கீழே தன் இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

கைகளை இழந்த தான்சென் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. இதனையடுத்து, நடிகர் ராகா லாரன்ஸின் தலைமையில் நடைபெறும் கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்தும் வந்துள்ளார்.

இந்நிலையிலேயே தனது விடாமுயற்சியின் காரணமாக, என்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார். இப்படி தனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலையும் பிறரின் உதவி இன்றி செய்ய கற்றுக்கொண்டுள்ளார்.

இவருக்கு திருமணமாகி தற்போது ஒன்றரை வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், தனது மனைவியையும் குழந்தையும் தான் வாகனத்தில் அழைத்து செல்ல இயலவில்லை என்று விரக்தியடைந்த தான்சென் கார் ஓட்ட வேண்டும் என்று உறுதிபூண்டார். ஆனால், தனது நிலையை உணர்ந்த தான்செனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு கை இல்லாத பெண் ஓட்டுநர் உரிமை பெற்ற செய்தியை படிக்கவே, தான்செனுக்கு ஒரு நம்பிக்கை தென்பட்டுள்ளது. இதனையடுத்து, ஸ்ரீவாரி சங்கர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியுடன் கார் ஓட்ட பழகியுள்ளார். பிறகு ஓட்டுநர் உரிமம் பெற நினைத்து அதற்காக விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சோதனையின் போது கார் ஓட்டுவதில் இவருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும்,மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவமனையின் மூலம் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனயின் செல்லும்படி பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளார் தான்சென்.

சென்னை
அது என்ன ”Swell waves"? - அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுப்பு!

இங்கு இவரை சோதனை செய்ய அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் திருநாவுக்கரசு மற்றும் மூத்த டாக்டர்கள் தலைமையிலான மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களே தான்சென் லைசென்ஸ் பெற பெரிதும் உதவியுள்ளனர்.

முதலில் தான்சென்னை சோதித்த மருத்துவர்கள் தான்சனுக்கு கார் ஓட்டுவதில் ஒரு சில சிக்கல்கள் உள்ளது என்பதை அறியவே, தான்செனுக்கு ஏற்றார் போல காரின் வடிவமைப்பு மாற்றப்பட்டு, தானியங்கி, கியர் முறையில் காரை ஓட்டும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது குறித்து அம்மருத்துவமனையில், உதவி பேராசிரியர் சிற்றரசு தெரிவிக்கையில், ”தான்சனுக்கு கார் ஓட்டுவதில் ஒரு சில சிக்கல்கள் இருந்தததை உணர்ந்து கொண்டோம். அவர் கார் ஓட்டும்போது,தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தான்சென்னால் காரின் வீலை அடைய முடியவில்லை. அவரால் காரின் கைப்பிடியை அடைய முடியவில்லை.

தான்சென் இதை செய்யாமல் எங்களால் இவர் தகுதி வாய்ந்தவர் என்ற சான்றிதழை தர இயலாது. அப்போதுதான், தான்சென்னால் கால்களை பயன்படுத்தி ஓட்ட முடியுமா என்று நாங்கள் கேட்டோம். இதன்பிறகு 1 மாதம் கழித்து மருத்துவமனைக்கு வந்தார் தான்சென்.

சென்னை
“என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்” - நெல்லை காங். நிர்வாகி உடல் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு

அப்போது. அவர் கால்களால் ஓட்டுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். இதனையடுத்து, அவரின் தேவைக்கு ஏற்ப கார் மாற்றியமைக்கப்பட்டது. அவர் தனது வலது கலால், ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்தவும், அவரின் இடது காலால் ஆக்ஸிலேட்டரை தள்ளவும், பிரேக்குகளையும் பயன்படுத்தினார்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தான்சென் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானவர் என்று மருத்துவர்கள் சான்றழித்துள்ளனர். இதன்பின்னர், ரெட்டேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஏப்ரல் 22 அன்று, ஓட்டுனர் உரிமம் பெற்ற தான்சென் தமிழகத்திலேயே முதல்முறையாகவும் இந்தியாவிலேயே மூன்றாவது நபராகவும் கைகள் இல்லாத கார் ஓட்டுனர் லைசன்ஸ் பெற்றவர் என்ற சாதனையை படைத்து அசத்துள்ளார். தற்போது, சீட்பெல்ட்டை அணிந்துகொண்டு , ஸ்டியரிங்கில் கால் வைத்து தான்சென் கார் ஓட்டும் புகைப்படங்கள் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com