'வெளிய வரச் சொல்லு அவன'.. நாய் குரைத்ததால் சர்ச்சை.. அரிவாளோடு இறங்கி ரகளை செய்த துணை வட்டாட்சியர்!

நாய் குரைத்த விவகாரம் தொடர்பாக, கையில் அரிவாளோடு சென்ற துணை வட்டாசியரின் விடியோ சமூக வலைதளத்தில் வைரல்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி புதிய தலைமுறை

கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்தான் கொளஞ்சியப்பன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பாக, தெருவில் சென்ற நாய்களை பார்த்து குரைத்த, கொளஞ்சியப்பனின் நாய் விரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது, அதே தெருவில் கொளஞ்சியப்பன் வீட்டருகே வசித்து வரும் கள்ளக்குறிச்சி மண்டல துணை வாட்டாட்சியர் சிலம்பரசன், நாய் குரைத்த சத்தம் கேட்டு ஆத்திரமடைந்துள்ளார். தொடர்ந்து, தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துக்கொண்டு ஆவேசமாகவும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியவாறும் கொளஞ்சியப்பன் வீட்டின் வாசலுக்கு சென்றுள்ளார்.

அங்கு கொளஞ்சியப்பனிடம், “உன்னை வெட்டி கொலை செய்யாமல் விட மாட்டேன்” என கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரச்னை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்புள்ள அதிகாரியாக பணிக்கு செல்ல வேண்டிய நேரத்தில், இது போன்ற பிரச்னையில் ஈடுபட்ட மண்டல துணை வட்டாச்சியர் சிலம்பரசனுக்கும் கொளஞ்சியப்பனுக்கும் முன் விரோதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட கொளஞ்சியப்பன் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி
விஷம் கலந்த சிக்கன் ரைஸ்| இளைஞரின் கொடூர செயலால் தாத்தாவை அடுத்து, தாயின் உயிரும் பறிபோன சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com