sundar c, Tamannaah, Raashii Khanna
sundar c, Tamannaah, Raashii KhannaAranmanai 4

Aranmanai 4 Review | குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா இந்த அரண்மனை 4..?

மொத்தத்தில் வரண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் ரசிகர்களுக்கும் அரண்மனை 4 ஒரு குறிஞ்சிப் பூ. என்னது இது குறிஞ்சுப்பூவா என ஷாக் ஆக வேண்டாம்.
Aranmanai 4 Review (2.5 / 5)

தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதே இந்த அரண்மனை 4.

sundar c, Tamannaah, Raashii Khanna
TAROT Review | 'பேய்'னு சொன்னாலே பயப்படுவீங்களா..!

சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் அறிந்துகொள்ள உறவினர் கோவை சரளாவுடன் கிராமத்துக்கு வருகிறார் சுந்தர் சி. அந்த பங்களாவில் செட் பிராப்பர்ட்டியாக விடிவி கணேஷும், யோகி பாபுவும் இருக்கிறார்கள். அந்த அரண்மனையின் சொந்தக்காரர் டெல்லி கணேஷ். அவரின் பேத்தி ராஷி கண்ணா. அந்த அரண்மனையின் இன்னொரு செட் பிராப்பர்ட்டி சேசு. கேமியோ செட் பிராப்பர்ட்டியாக மொட்டை ராஜேந்திரன். இவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள். அந்த ஊரில் இருப்பது என்ன மாதிரியான பேய். அந்த பேயின் பூர்விகம் என்ன. தங்கை, தங்கை கணவர் மரணத்துக்கு யார் காரணம். ஏன் இந்தக் கொலைகள். அந்த பேய்க்கு கிடைக்கவிருக்கும் சக்திகள் என்ன என்ன இதெல்லாம் தான் அரண்மனை 4 படத்தின் கதை.

முந்தைய பாகங்களை விட இந்தப் படத்தில் ஹாரர் காட்சிகளை சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. என்ன வினய், சித்தார்த் , ஆர்யா அளவுக்குக்கூட இதில் சந்தோஷ் பிரதாபுக்கு படத்தில் வேலை இல்லை. எல்லாமே சுந்தர் சி தான். அதில் குறையும் ஒன்றும் இல்லை. அடியாட்களை தூக்கிப்போட்டு அடிப்பது, பேய் என்றாலும் கேசுவலாக டீல் செய்வது என இது சுந்தர் சி ஸ்டிராங் ஏரியா என்பதால் அதைச் சிறப்பாக செய்திருக்கிறார். என்ன இந்த ஓவர் மேக்கப்பை மட்டும் கொஞ்சம் குறைக்கலாம். ஹன்சிகா, ஆண்டிரியா, லட்சுமி ராய், த்ரிஷா, ராஷி கண்ணா என சுந்தர் சியின் பேய் நாயகிகளில் தமன்னா புது வரவு. இரண்டு குழந்தைகளுக்கு தாய் கதாபாத்திரம் என்பதால் சுந்தர் சியின் கிளாமர் ஃபேன்ஸுக்கான படம் முடிந்ததும் ஒரு பாடலை மட்டும் கலர்ஃபுல்லாக எடுத்திருக்கிறார்.

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் சுத்தமாய் மிஸ்ஸிங். தங்கை கொலை எப்படி நடந்தது தெரியுமா என ஒவ்வொரு ஃபிரேமாக நமக்கு விளக்குகிறார்கள். சார், புரிஞ்சுடுச்சு மேட்டருக்கு வாங்க என நாம் கத்த வேண்டியதிருக்கிறது. ஒரு வழியாக சிம்ரனும், குஷ்புவும் அம்மன் டான்ஸ் ஆடும்போதுதான் நாமும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறோம். அதுவரையில் அடியாட்களை தார் ரோட்டில் இழுப்பது போல், திரைக்கதையையும் இழுத்துவிட்டார் சுந்தர் சி. ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசையும், இரண்டு பாடல்களும் செம்ம ரகம். தமன்னா பாடலுல் சரியாக வாய் அசைக்கிறேன் பாருங்க என ஏதோ செய்துகொண்டிருப்பதுதான் மைனஸ்.

உண்மையிலேயே பேய், பூதம், சாத்தான் இதெல்லாம் உண்மையென்றால் அடுத்த அடுத்த படங்களில் இருந்தாவது முரட்டு மொக்கை காமெடி காட்சிகளை நீக்கட்டும். ஒரு காலத்தில் மிகச்சிறந்த காமெடி நடிகையாக இருந்த கோவை சரளா, பேய்ப் படங்களில் வரும் காட்சிகள் எல்லாம் போர் அடிக்கின்றன. இன்னமும் எத்தனை காலத்துக்கு ' ராகவா' மாடுலேசனை வைத்தே ஒப்பேற்றுவார் என தெரியவில்லை. அதை மேலும் சோதிக்க வைக்கிறது விடிவி கணேஷின் காமெடி பெர்பாமன்ஸ். சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடி அட்டகாசமாக இருக்கும். இதில் அந்த ரக காமெடிக் காட்சிகளைத் தேட வேண்டியதிருக்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் மட்டுமே இந்தக் கூட்டணி சிரிக்க வைக்கிறது. மற்றபடி, சுந்தர் சி விரைவில் காமெடி நடிகர்களை கண்டுபிடிக்க ஒரு தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் போல. காமெடி வறட்சி தாண்டவமாடுகிறது. காமெடி நடிகர்கள் என வருபவர்கள் அதைவிடவும் சோதிக்கிறார்கள்.

அரண்மனை 4 விமர்சனம்

மொத்தத்தில் வரண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் ரசிகர்களுக்கும் அரண்மனை 4 ஒரு குறிஞ்சிப் பூ. என்னது இது குறிஞ்சுப்பூவா என ஷாக் ஆக வேண்டாம். அரைக்க எதுவும் இல்லாமல், நாமே கேரளாப் படங்களையும் , ரீரிலீஸ் படங்களையும் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அப்படியான சூழலில் முளைத்த குறிஞ்சுப்பூ இது. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அட்ஜஸ் செய்து கொள்ளவும். சுந்தர் சியின் பேய் டார்கெட் ஆடியன்ஸுக்கு படம் நிச்சயம் பிடிக்கும். அப்படியே சட்டுபுட்டுன்னு உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, டைப்ல ஒரு முழுநீள காமெடிப் படமும் தாருமய்யா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com