Published : 06,Dec 2017 02:26 PM
வெற்றிமேல் வெற்றிகளை குவித்து இந்திய அணி சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 9 தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற போது சில கேள்விகள் எழுந்தது. கேப்டன் பொறுப்பு சுமையாகி கோலியின் பேட்டிங் திறன் குறைந்துவிடும் என்று பேசப்பட்டது. ஆனால், கேப்டன் பொறுப்பேற்றது அதில் கோலியின் அதிரடி ஆட்டமும் உக்கிரமடைந்துள்ளது. அதேபோல், வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறார்.
தற்போது, இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்துள்ளது.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தான் இந்த சாதனை வெற்றி தொடங்கியது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
- 1.இலங்கை 2-1(3), 2015 (சொந்த மண்ணில்)
- 2.தென் ஆப்பிரிக்கா 3-0(4), 2015-16
- 3.வெஸ்ட் இண்டீஸ் 2-0(4), 2016 (சொந்த மண்ணில்)
- 4.நியூசிலாந்து 3-0(3), 2016-17
- 5.இங்கிலாந்து 4-0(5), 2017
- 6.வங்கதேசம் 1-0(1), 2017
- 7.ஆஸ்திரேலியா 2-1(4), 2017
- 8.இலங்கை 3-0, 2017 (சொந்த மண்ணில்)
- 9.இலங்கை 1-0(3), 2017-18
மேலும், கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடன் விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். 2005-ம் ஆண்டில் 31 வெற்றிகளை பாண்டிங் குவித்ததே இதுநாள் வரையில் சாதனையாக உள்ளது. தற்போது கோலியும் இந்த ஆண்டில் 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
- 31- ரிக்கி பாண்டிங், 2005
- 31-விராட் கோலி, 2017
- 29-ஜெயசூர்யா, 2001
- 29-ரிக்கி பாண்டிங், 2005
- 29-ரிக்கி பாண்டிங், 2007
- 29-ஸ்மித், 2007