[X] Close

பிளாஸ்டிக் ‌கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 5 வாகனங்கள்

fire-accident-in-pvc-pipe-godown-near-thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பிளாஸ்டிக் பைப் மொத்த விற்பனை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.


Advertisement

திருவள்ளூர் மாவட்டம் மத்தூர் கிராமத்தில் பிளாஸ்டிக் பிவிசி பைப் மற்றும் டேங்க்‌ ஆகிய பொருட்களை கிடங்கில் மொத்தமாக இருப்பு வைத்து குப்பன் என்பவர் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து,‌ தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் ஆய்வு மேற்கொண்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close