
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புயல் பாதித்த இடங்களை வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பார்வையிட்டார். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த உதயகுமார், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மின்விநியோகம் சீரமைக்கப்படும். மீட்புப் பணியில் தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
படகில் வீடு வீடாக சென்று மக்களை நலம் விசாரித்தோம். மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க வீட்டிற்குள் புகுந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மக்களுக்கு தேவையான பிஸ்கெட், பால் பாக்கெட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.