Published : 21,Feb 2017 07:05 AM
ஸ்டாலின் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக செய்தி வந்தது: வைகோ

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாக நாளேடுகளில் செய்தி வந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் எந்த வாக்கெடுப்பும் ரகசியமாக நடைபெற்றதில்லை என தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட திமுகவினரின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். ஸ்டாலின் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் திமுகவை சேர்ந்த துரைமுருகன் பிளேடுகளால் கைகளை அறுத்துக் கொள்வேன் எனவும் சட்டமன்ற பாதுகாவலர்களை மிரட்டியதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளதாக வைகோ கூறினார்.திமுகவினரை வெளியேற சொல்லி சபாநாயகர் உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் வெளியேற மறுத்துள்ளனர். அதன் பின்னரே சட்டமன்ற பாதுகாவலர்களை கொண்டு அவரகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அவர் விளக்கியுள்ளார்.