’தளபதி’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்தும் மம்மூட்டியும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த படம், ‘தளபதி’. இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம், 1991-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இவர்கள் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்தன. இந்தப் படம் அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ’காலா’ படத்திலும் மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியும் மம்மூட்டியும் மராத்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்தை தீபக் பாவே என்ற இயக்குனர் இயக்குகிறார். படத்துக்கு ’பஷாயடன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். அரசியல்வாதியும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணா சர்வே தயாரிக்கிறார்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. தீபக், ’இடாக்’ என்ற படத்தில் கோ -ரைட்டராக பணியாற்றியவர். இந்தப் படம் இப்போது கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்