Published : 18,Nov 2017 01:46 AM

எனக்குத் தெரியாமல் போயஸ் கார்டனில் சோதனையா? தீபா ஆவேசம்

IT-raids-at-Poes-Garden--Jayalalithaa-s-niece-cries-foul

ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம் என அவரது அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார். 

சசிகலாவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருக்கும் இடங்களில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 

இதை அறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நள்ளிரவில் போயஸ்கார்டனுக்கு சென்றார். வீட்டிற்குள் செல்ல முயன்ற அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

ஆதங்கமடைந்த தீபா, சட்டப்பூர்வ வாரிசான தனக்குத் தெரியாமல் சோதனை நடத்துவது தவறு என்று தெரிவித்தார். ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அவர், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்