[X] Close

அரசின் நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை: எஸ்.பி.வேலுமணி

Rain-water-not-stagnant--Minister-S-P-Velumani

போர்க்கால அடிப்படையில் அ‌ரசு ‌எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, பலத்த மழை பெய்தும் பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் எஸ்.பி‌.வேலுமணி தெரிவித்தார்.


Advertisement

தொடர் மழையையடுத்து, வேளச்சேரி மேம்பாலம், பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலப் பகுதிகளில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், நிலோபர் கஃபில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்‌ பின்‌னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு எடுத்த துரித நடவடிக்கையால் இதுவரை 14,000 ‌டன் ஆகாயத் தாமரை அகற்றப்பட்டுள்ளதாகவும் 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனால்தான் சாதாரண மழைக்கே ‌20 நாட்கள் வரை தண்ணீர் தேங்கும் நிலை மாறி, தற்போது பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close