’உண்மையாவே இந்த காம்போ ஸ்பெசல் தான்..’ தனுஷ்-ரஹ்மான் குரலில் கவரும் ‘அடங்காத அசுரன் பாடல்’!

முதல்முறையாக தனுஷ் மற்றும் ஏஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து பாடியிருக்கும் ‘அடங்காத அசுரன் தான்’ பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் - ரஹ்மான்
தனுஷ் - ரஹ்மான்web

கேப்டன் மில்லர் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் தன்னுடைய 50-வது திரைப்படத்தின் வெளியீடுக்காக காத்திருக்கிறார். ‘ராயன்’என பெயரிடப்பட்டிருக்கும் 50-வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ், ஒரு பெரிய திரைப்பட்டாளத்தையே தன்னுடைய படத்தில் அடக்கியுள்ளார்.

வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராயன் படத்தில், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 ராயன்
ராயன்

ஏற்கனவே தனுஷ் இயக்கி நடித்த பா.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 50வது படத்தையும் வெற்றிப்படமாக கொடுக்கவேண்டிய உழைப்பில் தனுஷ் தானே களத்தில் இறங்கியிருகிறார்.

மொட்டை தலையுடன் தனுஷ், ஃபிட்டான உடல் மிடுக்குடன் கையில் கத்தியுடன் வெளியான இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில், ‘அடங்காத அசுரன்’ என ஆரம்பிக்கும் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

தனுஷ் - ரஹ்மான்
"உங்களை வைத்து இயக்கும் நாள் வரும் என நினைக்கவில்லை" - தன்னை செதுக்கிய குருவுக்கே டீச்சர் ஆன தனுஷ்!

இந்த காம்போ ஸ்பெசலா தான் பா இருக்கு!

தனுஷ் எழுதி, ரஹ்மான் இசையமைத்து, பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்றி, பாடலையும் தனுஷ் மற்றும் ரஹ்மான் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். கரகரப்பான தனுஷ் குரலுடன், மெல்லிய ரஹ்மான் குரலும் இணைந்து ஒரு கலவையாக உருவாகியிருக்கும் இந்த பாடல் பகை மற்றும் காதல் இரண்டையும் வெளிப்படுத்துகிறது.

தனுஷ் - ரஹ்மான்
தனுஷ் - ரஹ்மான்

அடங்காத அசுரன் தான், வணங்காத மனுசன் தான், தோளோடு தோள் நின்னா தருவானே உசுர தான்’ என தனுஷ் குரலில் தொடங்கும் பாடல், ‘போருக்கு போகனும் போகனும்’ என நீள்கிறது. பின்னர் “போகி போகி பகையை கொளுத்து சாமி, போகி போகி போகி எவன் டா எதிரி காமி” என ரஹ்மான் குரலில் ஒரு ஹைப் தொட்டு நம்மை அசுரன் பட பாடலான “வா அசுரா வா அசுரா” பாடலின் டெம்ளேட்டுக்கு அழைத்துச்செல்கிறது.

தனுஷ் - பிரபுதேவா
தனுஷ் - பிரபுதேவா

பாதி பாடல் வரை பகையை முடிக்கும் வரிகளை வெளிப்படுத்தும் பாடல், பிற்பாதியில் காதலை வெளிப்படுத்துகிறது. ‘எதுவுமே நம்ம கையில் இல்ல புள்ள’ என தனுஷ் குரலில் ஒலிக்கும் பாடல், “உசுரே நீதானே நீ தானே, நிழலா உன்கூட நான் தானே, முடிவு உன்கூட தானே” என ரஹ்மான் குரலில் உள்ளூர கிடக்கும் காதலை ஊற்றெடுக்கிறது. பகை, காதல் இரண்டையும் தனுஷ் மற்றும் ரஹ்மான் இரண்டு குரல்களும் தனித்தனியே நம்மில் கடத்துகின்றன. “உண்மையில் இந்த காம்பே குரல் ஸ்பெசலா தான் பா இருக்கு” என்ற நல்ல ஃபீலிங்கை பாடல் ஏற்படுத்துகிறது.

தனுஷ் - ரஹ்மான்
பாடல் உரிமை யாருக்குச் சொந்தம்.. யுவன், ரஹ்மான் சொன்னதென்ன.. இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சொல்வதென்ன?

படம் எப்போது ரிலீஸ்?

ராயன் படம் முடிவடைந்து கடைசிகட்ட வேலைகள் நடந்துவரும் நிலையில், திரைப்படம் வரும் ஜுன் 13ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

தனுஷ் - ரஹ்மான்
"என்னை தவறாக சித்தரிக்காதீங்க.. நான் ஏமாந்த கதையையே படமா எடுக்கலாம்" - இயக்குநர் அமீர் நேர்காணல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com