[X] Close

துபாயில் காவல்துறையினருக்கு பறக்கும் பைக்குகள்

Flying-bikes-for-police-in-Dubai

துபாயில் காவல்துறையினருக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவும் வகையில் பறக்கும் பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடம்பரமானவர்கள் அதிகமாக வாழும் துபாயில், அந்நாட்டின் அரசாங்கம் சார்பில் பறக்கும் பைக்குகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் காவல்துறையினருக்கு சிறந்த வாகனங்களை வழங்க வெவ்வேறான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் துபாயின் இந்த புதுமையான பறக்கும் பைக்குகள் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளன. இந்த பறக்கும் பைக்குகளை ரஷ்யாவின் ஹேவ்சர்ஃப்  நிறுவனம் தயாரித்துள்ளது.

70 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த பறக்கும் பைக்குகள் 300 கிலோ எடை வரை தாங்கக்கூடியவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு மற்றும் அனைத்து விதமான குற்றங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க இந்த பறக்கும் பைக்குகள் பெரிய அளவில் பயன்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். நாடு முழுவதும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் துபாயின் இந்த பறக்கும் பைக்குகள் அனைத்து தரப்பினரையும் கவனிக்க வைத்துள்ளது. துபாயில் நடந்த தொழில்நுட்ப நிகழ்ச்சி ஒன்றில் துபாய் காவல்துறையினர் இந்த பறக்கும் பைக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close