Published : 05,Jan 2017 09:01 AM

விவசாயிகளுக்கு ஆதரவாக நீங்களும் வீடியோ அனுப்பலாம்..!

You-can-also-send-video-for-supporting-farmers

விவசாயிகளுக்கு ஆதரவாக 1 நிமிட வீடியோ பதிவு செய்து அதனை புதிய தலைமுறைக்கு நீங்களும் அனுப்பி வைக்கலாம்..

தமிழகத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்ததால் அணைகள் அனைத்தும் நீரின்றி காணப்படுகிறது. பருவ காலத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பயிரிட்ட விவசாயிகளோ நீர் இன்றி பயிர்கள் கருகும் வேதனையில் மனம் நொந்து காணப்படுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் சோகத்தின் உச்சிக்கே சென்ற விவசாயிகள் தங்களது உயிர்களையும் மாய்த்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் குறித்து உடனுக்குடன் பதிவு செய்து வருகிறது புதிய தலைமுறை. விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தும் அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்தும் இன்று நாள் முழுவதும் தொடர் நேரலையாக செய்தி வெளியிட்டு வருகிறது புதிய தலைமுறை.

விவசாயிகளுக்காக புதிய தலைமுறை மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம். விவசாயிகளுக்கு ஆதரவாக 1 நிமிட வீடியோ பதிவு செய்து அதனை 9003074000 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள்.. ஆட்சியாளர்களின் கவனம் மட்டுமல்ல அனைவரின் கவனமும் உழவர் பிரச்னைகள் மீது திரும்ப வேண்டிய இக்கட்டான தருணம் இது..

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்