[X] Close

ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

sivakarthikeyan-birthday-wishes-to-anirudh

ஒய் திஸ் கொல வெறி பாடல் மூலம் தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை உருவாக்கிய இளம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு இன்று பிறந்தநாள். இதனையொட்டி சிவகார்த்கேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிரூத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


Advertisement

தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பக்காலத்தில் இருந்தே என்னை ஆதரித்தற்கும் என் கேயரியரில் துணை நின்றதற்கும் லவ் யூ சார் என்று பாராட்டி இருக்கிறார். அனிரூத்தின் பிறந்தநாள் பரிசாக சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அனிரூத் முதன் முதலாக கொல வெறிப் பாடல் மூலம்தான் பிரபலமானார். ஆங்கிலமும் தமிழும் கலந்த மொழியில் நடிகர் தனுஷ் எழுதியிருந்த அந்தப் பாடல் அனிரூத்தின் இசையில் புது ட்ரெண்ட் ஆனது. பாடல் வெளியான 4 நாட்களில் 18 லட்சம் ஹிட்ஸ் அடித்தது. ஒரு தென்னிந்திய பாடல் இதற்கு முன்பு இந்தளவுக்கான சாதனையை எட்டியதில்லை. இந்தப் பாடல் ஏற்படுத்திய செல்வாக்கை கண்டு பிரதமர் மன்மோகன் சிங்கே தனது விருந்தில் பங்கேற்குமாறு தனுஷூக்கு அழைப்புக் கொடுத்தார். டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமர் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்தில் தனுஷ், அனிருத் கலந்து கொண்டனர். அந்த விருந்தில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவும் கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு அனிருத்தை அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என பலர் குறிப்பிட்டு எழுதினர். கத்தி, வேலையில்லா  பட்டதாரி, வேதாளம், காக்கி சட்டை, மாரி, நானும் ரவுடிதான், ரெமோ என பல படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். அனைத்து படங்களிலும் பாடல்கள் ஹிட் ஆகின. இன்று அனிரூத்தின் பிறந்தநாளுக்கு தனுஷ் தனது ட்விட்டரில் பதிவு எதுவும் இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close