வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு போதிய உணவு வழங்கப்படாததால், ஒருவேளை மட்டும் உணவு உண்பதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
மியான்மரில் நீடித்து வரும் வன்முறை காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்ய இஸ்லாமியர்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தங்க பாதுகாப்பான இடமும், உண்ண உணவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தன்னார்வ அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன. அத்துடன் காக்ஸ் பசார் அகதிகள் முகாம்களில் மட்டும், போதிய உணவு கிடைக்காத காரணத்தினால் ஏராளமான குழந்தைகள் மெலிந்து காணப்படுகின்றனர். அவர்களது பசியை போக்க முடியாமல் தாய்மார்களும் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். இந்த சூழலில் அங்குள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் வசிக்கும் 90 சதவிகிதம் பேருக்கு ஒருவேளை உணவு மட்டுமே கிடைத்து வருவதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல முகமையான யூனிசெப்ஃ உறுதிப்படுத்தியுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி