[X] Close

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதங்களுக்குள் நிறைவடையும்: ராஜேஸ்வரன்

Jallikattu-violence-enquiry-completed-within-six-months

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதங்களில் நிறைவடையும் என விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் மதுரையில் தனது விசாரணையை நேற்று தொடங்கியது. மொத்தமாக 25 நபர்களிடம் 3 நாட்களுக்கு விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக 1,951 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீண்டும் மதுரையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போரட்டத்தின்போது சென்னை, மதுரை அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close