Published : 11,Mar 2023 04:10 PM
‘எக்ஸ்க்ளூசிவ் வீடியோ வேணும்னு கேட்டிங்களாமே’ - ‘லியோ’ டீம் பகிர்ந்த விஜய், சஞ்சய் வீடியோ

‘விஜய்யின் ‘லியோ’ படத்தின் அடுத்த அப்டேட்டுக்கு தயாராகுங்கள்’ என்று படக்குழுவினர் ட்வீட் செய்தது வைரலாகி வந்த நிலையில் சஞ்சய் தத் மற்றும் விஜய் உள்ள வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய்யின் 67-வது படமாக உருவாகி வரும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது ஒன்றரை மாத காலமாக காஷ்மீரில் 500 பேர் கொண்ட குழுவுடன் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இதில் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் பகுதிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மே மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனியும் தற்போது இணைந்துள்ளார். ‘பூவிழி வாசலிலே’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘அஞ்சலி’, ‘சூரியன்’, ‘திருமதி பழனிசாமி’ உள்ளிட்டப் படங்களில் மிரட்டல் வில்லனாக வந்த இவர், லேட்டஸ்ட்டாக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவின் தந்தையாகவும், ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தில் ராஷ்டிரகூட மன்னராகவும் வந்திருந்தார்.
Malayalam Actor Babu Antony On Board For #LEO
— Harish N S (@Harish_NS149) March 10, 2023
He joins the sets of #Leo with #Thalapathy & #SanjayDutt#LeoFilm@actorvijaypic.twitter.com/ljbqzu0ik6
இந்நிலையில், படத்தின் அப்டேட்டுக்கு தயாராகும் படி இந்தப் படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ ட்வீட் செய்திருந்த நிலையில், தற்போது படப்பிடிப்புக்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘எக்ஸ்க்ளூசிவ் வீடியோ வேணும்னு கேட்டிங்களாமே, எங்களுக்கு கேட்டுருச்சு’ என்று வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளது. பாபு ஆண்டனி, விஜய் மற்றும் சஞ்சய் தத் நடிக்கும் போர்ஷன் படம்பிடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
BRACE YOURSELF ! #LEO
— Seven Screen Studio (@7screenstudio) March 11, 2023
Roll out the red carpet @duttsanjay sir has arrived in style to set the screen on fire
— Seven Screen Studio (@7screenstudio) March 11, 2023
Exclusive video venum nu keteengalame, engaluku keturchu #Thalapathy@actorvijay sir @Dir_Lokesh@trishtrashers@anirudhofficial@Jagadishbliss#LEO pic.twitter.com/A0Ea1dqZVj