[X] Close

கன்னட நடிகர் சாய்குமாரின் மகன் தமிழில் ஹீரோவாக அறிமுகம்

new-actor-indeused-in-tamil-cinema-industry

கன்னட நடிகர் சாய்குமாரின் மகன் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதற்கான விழாவில் அவர் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர். இவரது புதிய படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்தத் தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உட்பட பலர்  கலந்துகொண்டனர். அப்போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close